Monday, January 1, 2024

பவானி 2 நொய்யல் - 7 - க்ருஷ்


அழகிய பழமைவாய்ந்த காரை வாய்க்கால் கல் பாலத்தை கடந்தால், சற்று தொலைவில் தாமங்கி எனும் ஒரு அமைப்பு.  இடது கீழ்க்கரையில் மூன்று அல்லது நான்கு கண்ணறைகள்.   தாமங்கிவாய்க்காலில் அதிகமாக வரும் தண்ணீரை கீழ்க்கரை வழியே  உபரி நீராக காவிரி ஆற்றுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.  மழை பெய்யும்பொழுது வாய்க்காலில் நீர் வரத்து அதிகம் இருக்கும்.  அதேபோல ஏதேனும் ஒரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்வதற்கும் இந்த அமைப்பைத் திட்டமிட்டு இருக்கலாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு மைலுக்கு ஒரு  தாமங்கி  என்றவாறு உள்ளது. 

தாமங்கி : தற்பொழுது இரும்பு ஷட்டர்கள் வைத்து உள்ளார்கள் அதனை திறப்பதற்கும் மூடுவதற்கும்  பெரிய இரும்பு ஸ்க்ரூ போன்ற அமைப்பின் வழி அந்த ஷட்டர்களை நிறுத்தி வைத்து உள்ளார்கள்.  வாய்க்கால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே சிமெண்ட் காரையால் நல்ல தரையாக  உள்ளது.   தாமங்கியின் மிகப் பெரிய பயன் உபரி நீரை வெளியேற்றுவது மட்டும் அல்ல. மது பிரியர்களுக்கு தண்ணியை அவர்களின் உள்ளேஆற அமர உட்கார்ந்து அனுப்பும் ஆகச் சிறந்த இடம்.  
 
தாமங்கி,  குமுளி, மதகு,  கண்ணறை இந்தப் பயணத்தின் வழி வந்த அழகான தமிழ் சொற்கள்.   கண்ணறைகள் என்பது தாமங்கியில் இருக்கும் அறைகளின் எண்ணிக்கைகளை கூறுகிறார்கள்.   
 
அன்றைய காலகட்டத்தில் தாமங்கி எப்படி கட்டியிருப்பார்கள் என்கின்ற யோசனை இருந்தது.  ஒருவேளை கற்கள் மூலமாகவே தடுப்பு சுவராக இருந்திருக்கலாம். அதன் வழியாக உபரி நீர் வெளியேறுகிறது.  ஏதேனும் பிரச்சனைகள் வாய்க்காலில் வரும்போது அதனை சரி செய்வதற்காக ஒவ்வொரு ஐந்து மைலுக்கு இந்த தாமங்கி  வைக்கப்பட்டு இருக்கலாம். 
 
தாமங்கி தாண்டி வண்டியை எடுத்தால்  தொலைவில் ரயில் பாலம்.   தொடர்வண்டி வரும் ஓசையும் கேட்டது.   தொடர்வண்டி வருவதை அழகாக தூரத்திலிருந்தே புகைப்படம் எடுத்துக்கொண்டு காலிங்கராயன் கடக்கும் இடத்தை உற்று நோக்கினோம்.   தொடர்வண்டி தண்டவாளம் நூறு வருடங்களுக்கு முன்பு போட்டதாக இருக்கும் என்பதால் காலிங்கராயன் மேலே தொடர் வண்டி சென்று கொண்டிருந்தது.  ‘எப்படி தொடர்வண்டி பாதையை கடக்கப் போகின்றோம்?’ என்று எங்கள் இருவருக்கும் விவாதம்.  
 
காலிங்கராயன் ஒட்டி நுழை பாலம் சென்றது.  ரயில் மேலே உயர் பாலம் அமைத்து கடந்து இருந்தது.  ஒரு சின்ன மாட்டு வண்டி அல்லது ஒரு சிறிய மினி டெம்போ செல்லுமளவுக்கு அகலம் அதில் இருந்தது. 
 
சென்னை செல்லும் பொழுது காவிரி கடக்க ஒரு தொடர் வண்டி பாதையா அல்லது இரண்டு தொடர்வண்டிப்பாதையா என்ற கேள்வி எழுந்ததுண்டு.   அதாவது வருவதற்கு ஒரு பாதை செல்வதற்கு ஒரு பாதை என இரு பாதைகள் அந்த தண்டவாளங்களில் உள்ளதா என்று யோசித்தது உண்டு.   பள்ளிபாளையம் காவேரி பாலம் அருகே நீண்ட நேரம் சிக்னலுக்காக ரயில் காத்துக்கொண்டிருக்கும் . அப்பொழுதெல்லாம் எனக்கும் சந்தேகம் இருக்கும்.  ஆனால் இரு தண்டவாளங்கள் என்பதை உறுதி செய்து இருந்தேன்.  ஆனால் இரண்டுமே ஒரே இடத்தில் செல்லாது காவிரியைக் கடக்கும் பொழுது ஒரு கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் இடைவெளியில் செல்லும். அதற்கான காரணம் பழைய புகைவண்டி நிலையம் மரப்பாலம் அருகில் இருந்தது. அது பழைய பாலமாக அன்றைய காலகட்டத்தில் ஒரே ஒரு தண்டவாளம் மட்டுமே காவிரியைக் கடந்து இருக்கும்.
ஆனால் புதிய ரயில் நிலையம் ஈரோடு காளைமாடு சிலை தாண்டி தற்போது உள்ள நிலையம்.  அப்பொழுது  இரண்டாவது தண்டவாளம் அமைக்கப்பட்டிருக்கலாம். அது சற்று தள்ளி கிட்டத்தட்ட முதல் தண்டவாளத்தில் இருக்கும்  500 மீட்டர் இடைவெளியில் இருக்கும்.  ஆனால்
 
பள்ளிபாளையம் ஆற்றுப்பாலம் சற்று தள்ளி மற்றுமொரு ரயில் தண்டவாளம் ஒரு 500 மீட்டர் தள்ளி இன்னும் ஒரு ரயில் தண்டவாளம் என இரண்டு பாதைகள் அந்த இடத்தில் ரோட்டை நோக்கி காவிரியை கிடைக்கின்றது.  ஆன்மா வந்த பிறகு, எப்பொழுதும் அந்த ரயில் பாதையை கடக்கும் பொழுது தண்ணீர் தேங்கி இருக்கும் அது வெண்டிபாளையம் தடுப்பணையின் தண்ணீர்.
 
இப்படியாக நாங்கள் வெண்டி பாளையத்தை கடந்தோம்.அடுத்து ஒரு கேள்வி வந்து அப்பொழுது கரூர் மற்றும் திருச்சி செல்லும் அந்த ரயில் பாதை எங்கே நம்மை கக்கின்றது.  காலிங்கராயன் கடக்கின்றதா என்ற கேள்வியும் எங்களுக்கு வந்தது. ஆனால் காலிங்கராயன்ரயில் பாதையை ஓரிடத்தில் கடந்து அதன் பயன்பாட்டு பரப்பளவை அதிகரித்தது என்பது அப்பொழுது எங்களுக்கு தெரியவில்ல
 
ரயில்வே தண்டவாளங்களை கடந்து வந்தால் ஒரு இடத்தில் பாறை சற்று மேலே ஒரு மரம் என ஒரு சிறிய ஆசுவாசமான இடம் இயற்கையோடு கலந்து கிடந்தது. ஈரோடு நகருக்கு அருகில் இந்த மாதிரி ஒரு அழகான இடமா? என்று வியப்பு எழும்பியது. இதனை சுற்றுலாத்தலமாக மாற்றலாமே?  என விவாதித்தொம்.
 
நகரை ஒட்டி இருக்கிற பகுதியில் கண்டிப்பாக காலிங்கராயன் ஒரு படகு போக்குவரத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும்.  எனக்கெல்லாம் காவிரியை அதுபோல மற்ற முடியும் என்று நம்புபவன்.  தேம்ஸ் நதி இது போலத்தானே ஓடிக்கொண்டு இருக்க வேண்டும.  அதன் கரைகளில் மிக நீண்ட நெடிய உயரமான கட்டிடங்கள் இன்றைய காலகட்டத்தை பறைசாற்றிக் கொண்டு உள்ளது நாமும் இயற்கை எழில் சூழ்ந்த இட்த்தை சற்றே கட்டுக்குள் கொண்டுவந்து, பொழிவூட்டி சுற்றுலாவை அதிகப்படுத்தலாம்.
  
கிட்டத்தட்ட மணி ஒன்பதை கடந்திருந்தது லேசாக பசிக்க ஆரம்பித்திருந்தது இவ்வளவு நேரமா கண்களுக்கும் செவிக்கும் மட்டுமே உணவு கொடுத்துக் கொண்டிருந்த எங்களுக்கு வயிற்றுக்கும் கொடுக்க வேண்டிய நேரம் வந்து இருந்தது கொக்கராயன்பேட்டை சென்று சாப்பிடுவோம் என்ற முடிவுக்கு வந்தோம் கொக்கராயன்பேட்டை பாலத்தை காலிங்கராயன் கடந்து சற்று தொலைவில் இருக்கும் காவிரி ஆற்றுப் பாலத்தை கடந்து ஒரு புரோட்டா கடையில் நிறுத்தினோம்.
 
சூடா புரோட்டா தோசை இருக்கு சார்
இட்லி இல்லைங்களா
 இல்ல சார்“.

சரி புரோட்டா ரெண்டு குடுங்க..”
 
ப்பொழுதுதான் கோவிட் பயமின்றி மக்கள் சகஜமாக வர ஆரம்பித்து உள்ளார்கள் என்று தோன்றியது.
 
 புரோட்டாவோடு இதுவரை வந்த பயணத்தை அசைபோட்டோம்
 
எப்படியும் ஒரு ரெண்டு மணிக்கு முடித்து விடலாம்’ என இருவரும் பேசிக் கொண்டோம் ஆனால் எங்களுக்கு தெரியவில்லை எவ்வளவு நேரம் அதன்பிறகு ஆகும் என்று.

புரோட்டாவை சாப்பிட்டு இலையை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு பணம் கொடுத்து விட்டு வெளியேறினோம்.
 
மனதைப் போல வயிறும் நிறைந்து இருந்தது.

---தொடரும்.....
 


No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...