Saturday, October 27, 2018

பெற்றோர்களாகிய நாம்

ஈரோடு வாசல் குழும பெற்றோர்கள் ஒன்று கூடி கலந்துரையாடும் “#பெற்றோர்களாகிய_நாம்!” நிகழ்வு நடத்தப்பட்டது.



கலந்துரையாடல் ”கல்வி - நெறிமுறைகள் – சம்பாதித்தல்” என மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டது.
முதலாவதாக...
கல்வி எனும் வகையின் கீழ்... முக்கியமாக எழுப்பப்பட்ட வினா, பிள்ளைகளின் கல்விக்காக நிறைய பிரயத்தனங்களை எடுக்கிறோம், பெரும் முடிவுகளை எடுக்கிறோம், பிள்ளைகளிடம் வலியுறுத்தல் என்கிற பெயரில் திணிக்கிறோம்.
இவையெல்லாம் எந்த அடிப்படையில் நியாயமாக கருதப்படுகிறது என்பதுதான்!\
ஏனேனில் இந்த பிரயத்தனம், முடிவு, திணிப்புகளால் ஏற்படும் விளைவுகள் பெரும்பாலும் நாம் இதற்குமுன் பார்த்திடாதவை.
இதுகுறித்து பலதரப்பட்ட கருத்துகள் முன் வைக்கப்பட்டன. மிகுந்த ஆரோக்கியமான கருத்துகள் அவை. அவற்றில் ஆற்றாமையும் அதிகம்.
மேலும், குழந்தையின் திறனுக்கு ஒப்பான பாடத்திட்ட கல்வி கிடைக்கவில்லை,
குழந்தைக்கும் இருக்கும் விருப்பம் சார்ந்த கல்வி கிடைக்கவில்லை என்பது குறித்தும் ஹோம் ஸ்கூலிங் குறித்தும் பேசப்பட்டது.
அவற்றிலிருந்து நான் புரிந்துகொண்டது -
1. சமூகம் ஏதோ ஒரு விதத்தில் நிர்பந்தத்திற்காக கல்வி குறித்து தீர்மானிக்கிறோம்
2. பெரும்பாலும் தற்போது கல்வியில் நாம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் trial and error வகை சார்ந்தவைகளாக இருக்கும் என்பதுதான்
இரண்டாவதாக...
குழந்தைகளிடம் நன்னெறி / ஒழுக்கம் / விதிகள் என ஏதேனும் ஒன்றை வலியுறுத்துவதன் அடிப்படையில்... கலாச்சாரம் பண்பாடு என்ற ஏதோ ஒன்றை நாம் கடைப் பிடிக்கிறோம் என்பதே மையப் புள்ளியாக இருந்தது.
பொட்டு வைப்பது, நகம் வெட்டுவது, தலை முடியை நாம் எதிர்பார்க்கும் வண்ணம் வைத்திருக்காத்து, உடைகள், வீட்டுக்கு வருபவர்களை வாங்க எனச் சொல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிள்ளைகளின் குறைகள் பகிரப்பட்டன.
எதெல்லாம் நம்பிக்கை, கலாச்சாரம், பண்பாடு எனச் சொல்லப்பட்டதோ அவற்றிலிருந்து நாமும் பெரும் தொலைவு விலகி வந்திருக்கிறோம் என்பதும் உணர்த்தப்பட்டது.
மூன்றாவதாக...
பிள்ளைகளுக்காகத்தான் சம்பாதிக்கிறோம், சொத்து சேர்த்துகிறோம் என்பது குறித்த நம்பிக்கைகள், கூற்றுகள் குறித்து உரையாடப்பட்டது.
பிள்ளையின் எதிர்காலத்திற்கு முழுமையான பாதுகாப்பு தரும் அளவிற்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டுமென்பது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையின் அடிப்படையா என்றும் விவாதிக்கப்பட்டது.
பிள்ளைகளுக்காக சம்பாதிக்கிறோம் என்கிற பெயரில் வாழ வேண்டிய வாழ்க்கையை வாழமுடியாமல் போகிறது என்பதும் பேசப்பட்டது.
#பெற்றோர்களாகிய_நாம்

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...