ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மனமருத்துவ மையம் மிகவும் முக்கியமாகும். சுவடிச்சாலையில் நாளேடுகள் ,இதழ்கள், பத்திரிகைகள், நூல்கள் என அனைத்தும் அறியாமை இன்னும் இருளை நீக்குகின்றன. பல வகையான நூல்களைக் கற்பதன் மூலம் சிறந்த அறிஞராகவும் திகழலாம்.
*"கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்"*
அனுபவமற்ற மனிதனை அனுபவம் உள்ள மனிதனாக மாற்ற இவ்வுலகில் எத்தனையோ எண்ணற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன. அத்தனை சாத்தியக்கூறுகளையும் அடைவதற்கு ஓர் மிகச் சிறந்த மையம் ஒன்று உள்ளது. அதுதான் மனமருத்துவ மையம். இங்கு (மனமருத்துவ மையத்தில்) அனைத்து கேள்விகளுக்கும் நாம் விடை தேடலாம்.
*வாசிப்போம் ! வாசிப்போம் ! என்றென்றும் வாசிப்பை நேசிப்போம் !*
வரும் காலத்தில் பல புதிய அத்தியாயங்களை உருவாக்கும் ஆற்றல் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது என்பதை எடுத்துரைக்கும் விதமாக அமையப்பெற்றது மனமருத்துவ மையம் என்னும் புத்தக நிலையம். நம் எதிர்காலத்தை முன்னோக்கி ஓர் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல புத்தகங்கள் நமக்கு ஒரு வழிகாட்டியாக நின்று, நம்மை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன. நம் வாழ்க்கையில் பல சிகரங்களை நம்மால் தொட முடியும் என்பதை எடுத்துக் காட்டவே அமைந்தன நூல்கள். மிகச் சிறிய நூல்கள் கூட பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி விட முடியும். நாமும் நம் எதிர்கால சந்ததியினர்களுக்கு முன் மாதிரியாக உருவாக முடியும் - நூல்களின் துணைகொண்டு.
*"நூல் பல கல்"*
உதாரணமாக ஒரு சதுரங்க விளையாட்டை எடுத்துக்கொள்வோம். இரண்டு யானைகள், இரண்டு குதிரைகள், இரண்டு ஒட்டகங்கள், ஒரு ராஜா, ஒரு ராணி என மிகப் பெரிய சக்திகள் முதல் வரிசையில் அணிவகுத்து வைக்கப்படும். இரண்டாவது வரிசையில் எட்டுச் சிப்பாய்கள் வைக்கப்படும்.
முதல் வரிசையில் வைக்கப்பட்ட காய்கள் மிகவும் சக்தி வாய்ந்த காய்கள் என்று அழைத்தாலும், அக்காய்களுக்கும் ஒரு குறைபாடுகள் உள்ளன. சிந்தித்துப் பாருங்கள் ! சதுரங்க ஆட்டம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை, ஒரு குதிரையால் குதிரையாக மட்டுமே இருக்க முடியும் ; ஒரு யானையால் யானையாக மட்டுமே இருக்க முடியும் ; ஒரு ஒட்டகத்தால் ஒட்டகமாக மட்டுமே இருக்க முடியும் ; ஒரு ராஜாவால் ராஜாவாக மட்டுமே இருக்க முடியும் ; ராணியால் ராணியாக மட்டுமே இருக்க முடிகிறது. அனைத்துப் படைப்பின் சூழ்நிலைகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட இயல்புடன் பிறந்து- வளர்ந்து- மடிந்து விடுகின்றது.
முதல் வரிசையில் இருக்கும் காய்களை விட , இரண்டாம் வரிசையில் இருக்கும் எட்டு சிப்பாய்களுக்குச் சக்தி குறைவுதான். ஆனால், சிப்பாய்களுக்கு ஒரு *"நிலை உயர்வு"* என்னும் *"தனித்துவம்"* உண்டு. சிப்பாய்கள் தான் இருக்கும் இடத்திலிருந்து ஆறு அடி எடுத்து வைத்து முன்னேறிச் சென்றால் (சதுரங்கத்தில் எதிர்க்கட்சியினரின் (opponent party) இடத்திற்கு சென்றால்), தற்போது தான் இருக்கும் சிப்பாய் என்னும் நிலையிலிருந்து தன்னை உயர்த்திக் கொள்ள முடியும்.
*"காலம் பொன் போன்றது"*
அதிகார உயர்வின் போது ஒரு சிப்பாய் தனக்கென குறிப்பிடப்பட்ட ஓர் இயல்பிலிருந்து, முன்னேறி உயர்நிலையை அடைகிறது. சதுரங்கத்தில் முதல் வரிசையில் உள்ள பலமான காய் ராணி என்பதால் அதிகார உயர்வின்போது பெரும்பாலும் ராணியையே தேர்ந்தெடுப்பார்கள் ( சிப்பாயை ராணியாக மாற்றிக் கொள்ளலாம்) . *"சிப்பாய்கள் போன்று தனித்துவமாக வாழ மனமருத்துவ மையத்தை நண்பனாக ஏற்று, நம் எண்ணத்தைச் செம்மைப்படுத்தி நாமும் புத்தகத்தின் துணை கொண்டு - ஒரு சாம்பியனாக இவ்வுலகில் வலம் வர முடியும்"*
நூலகங்களில் சிறுவர்களுக்கான கதைப்புத்தகங்கள், பாடப்புத்தகங்களும் இடம்பெறுகின்றன. மேலும், அனைவரும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாக நாளிதழ்கள், வார - மாத இதழ்கள், அரசாங்கத் தேர்வுக்கான புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், இலக்கணப் புத்தகங்கள், ஆராய்ச்சிப் புத்தகங்களும், நூலகங்களில் கணினி, நகல் எடுக்கும் கருவியும் இன்று பயன்பாட்டிற்கு வந்து விட்டன.
*"கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு"* என்பதை நினைவில் கொண்டு இன்னும் நான் கற்க வேண்டியது உலக அளவு உள்ளது என்பதை உணர்ந்து, நூல்களை வாசிப்பதன் மூலம் நமக்குத் தெரியாத உள்நாட்டு, வெளிநாட்டு நாட்டு நடப்புகளையும் ; மேலும் பல விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
*"கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு"*
நூலகங்கள் பல வடிவங்களில் பிரபலப்படுத்தப்பட்டன. சுழலும் புத்தக அலமாரிகள் - சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டன. பின்பு தனியார் நூலகங்கள் பயன்பாட்டிற்கு வந்தன என்பதை அனைவரும் கற்றிருப்போம்.
*"இன்றும் என்றும் நல்ல புத்தகம்தான் உத்தம நண்பன்"*
இன்றும் வாசிப்பு பழக்கம் குறையவில்லை. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் வாசிக்கின்றனர். ஆனால், மிகக்குறைந்த நேரங்கள்தான் வாசிக்கின்றார்கள். வாசிப்பு பழக்கத்தை சிறுவயதிலிருந்து ஏற்படுத்த வேண்டும். பாட அறிவோடு மட்டுமல்லாமல் உலக அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மனமருத்துவ மையம் -
*சாதாரண மனிதர்களையும் சாதனையாளர்களாக மாற்றும் !*
முந்தைய காலகட்டங்களில் களிமண் ஏடுகள், ஏட்டுச்சுவடிகள் கொண்டு நூல்கள் எழுதப்பட்டிருந்தன. தமிழில் முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்களிலும் நூல்கள் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன என்பதை பள்ளியில் படித்திருக்கின்றோம். மனமருத்துவமையத்திலும் பல வகை உண்டு
- மாவட்ட நூலகம்,
- தனியார் நூலகம்,
- கிராமப்புற நூலகம்,
- நடமாடும் நூலகம்,
- பள்ளி கல்லூரி நூலகம் என பலவகையான நூலகங்கள் உள்ளன. அறிவின் வளர்ச்சிக்கு என்றும் இன்றியமையாதது - நூல்களே !
- என்றும் நூல்களைக் கற்போம், மனமருத்துவ மையங்களோடு வாழ்வோம்.
*புனித முற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில் புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்*
- பாரதிதாசன்
- *பேபி அபர்ணா குணசேகரன் ( Abu G )*

Congratulations abuu🤗
ReplyDeleteவாழ்த்துக்கள் Jii🤗❤
ReplyDelete