உதிர்ந்து வறண்ட ஒரு பாதானி இலையை
கவ்விக் கொண்டு விரைகிறது அந்த நாய்
யாருக்கும் கிட்டாத அரிய பொக்கிஷம்
அடைந்த கர்வம் அதன் ஓட்டத்தில்
நொறுங்கி விடும் நிலையிலிருந்த
அந்த இலையை
சேதமின்றி கவனத்துடன் கவ்வியிருக்கிறது
விரோதத்துடன் துரத்தியபடி சில நாய்களும்
தோழமை பாராட்டியபடி சில நாய்களும்
காலை நேரப் போக்குவரத்திலும்
உயிரைப் பணயம் வைத்து
குறுக்கும் மறுக்கும் ஓடுகின்றன
வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன
அதே போன்ற பல நூறு இலைகள்
ஒரு நாயும் திரும்பிப் பார்க்கவில்லை
அவற்றின் கவனமெல்லாம் அந்த இலைதான்
எதற்குமே உதவாதென்றாலும்
ஏதோ ஒரு நாய் கவ்விக் கொண்டு ஓடுவதால்
சக நாய்களின் உறக்கம் கெடுக்கிறது
அந்த வறண்ட ஒற்றை இலை
கவ்விக் கொண்டு விரைகிறது அந்த நாய்
யாருக்கும் கிட்டாத அரிய பொக்கிஷம்
அடைந்த கர்வம் அதன் ஓட்டத்தில்
நொறுங்கி விடும் நிலையிலிருந்த
அந்த இலையை
சேதமின்றி கவனத்துடன் கவ்வியிருக்கிறது
விரோதத்துடன் துரத்தியபடி சில நாய்களும்
தோழமை பாராட்டியபடி சில நாய்களும்
காலை நேரப் போக்குவரத்திலும்
உயிரைப் பணயம் வைத்து
குறுக்கும் மறுக்கும் ஓடுகின்றன
வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன
அதே போன்ற பல நூறு இலைகள்
ஒரு நாயும் திரும்பிப் பார்க்கவில்லை
அவற்றின் கவனமெல்லாம் அந்த இலைதான்
எதற்குமே உதவாதென்றாலும்
ஏதோ ஒரு நாய் கவ்விக் கொண்டு ஓடுவதால்
சக நாய்களின் உறக்கம் கெடுக்கிறது
அந்த வறண்ட ஒற்றை இலை
No comments:
Post a Comment